strike

strike

Tuesday, 6 December 2016நமது பொது செயலர் சிங் அவர்களது துணைவியார் லீலாவதி தேவி இன்று காலை 10.10 அளவில் காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலி.

வருந்துகிறோம்... தமிழகத்தின் இரும்பு பெண்மணி அவர்... துணிச்சலில் இவருக்கு நிகர் எவருமே இல்லை... அவரை இழந்து வாடும் அவரது இயக்கத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்....

Monday, 5 December 2016


15-12-2016 வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்


1.  5-12-2016 -  குஷ்குமார் ரோடு அலுவலகம் - காலை 1100 மணி

2. 6-12-2016  -   கெல்லீஸ் எக்ஸ்சேன்ஞ்             - காலை 1100 மணி

3. 7-12-2016   -   மாதவரம் எக்ஸ்சேன்ஞ்              - மதியம் 1 மணி

4.  13-12-2016 -   கே.கே.நகர் எக்ஸ்சேன்ஞ்         -  காலை 1100 மணி

5. 14-12-2016  -    கிண்டி பொது மேலாளர்            -  மதியம் 1 மணி
                               அலுவலகம்

அனைத்து கூட்டங்களிலும் நமது மாநிலச் செயலர் மற்றும் கூட்டணிச் சங்க தலைவர்கள் சிறப்புரை ஆற்றுவார்கள். அனைவரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிப்பதோடு வேலை நிறுத்ததை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம்.

- சென்னை தொலைபேசி ஊழியர் கூட்டணி சங்கங்கள்

Sunday, 4 December 2016

இன்று டிசம்பர் 4 - போபால் விஷவாயு துயரத்தின் நினைவு நாள் -நெஞ்சை உறைய வைக்கும் ஒரு பயங்கர சம்பவம் 3-12-1984 பின்னிரவு 1 மணி அளவில் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் நடந்தது. விஷ வாயு தாக்கி 2,500 பேர் இறந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கண் பார்வை இழந்தார்கள். மனிதகுலம் சந்தித்த மோசமான பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் போபால் துயரம் நிகழ்ந்து 32 ஆண்டுகளைக் கடந்தும், அந்த சம்பவத்தின் சுவடுகள் அங்கிருந்து நீங்கவில்லை அங்கிருந்து நச்சுக் கழிவுகள் நீக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

Friday, 2 December 2016

 

இன்குலாப் ஜிந்தாபாத்... தொழிலாளர்களின் வேத மந்திரம்...
அதனையே தனது பெயராகக் கொண்டவர்  நம் மண்ணின் மைந்தர்... ஒடுக்கப்பட்ட மக்களின் பிறப்பிடம்...  இராமநாதபுரம்  மாவட்டம்  கீழக்கரையில் பிறந்த... பேராசிரியர் தோழர். சாகுல் ஹமீது...
மக்கள் கவிஞர் எனப் பெயர் பெற்ற தோழர்.இன்குலாப்... இன்று 01/12/2016 உடல் நலக்குறைவால்... மண்ணுலகை விட்டு மரித்தார்...
மனுசங்கடா...  நாங்க  மனுசங்கடா... உன்னைப்போல... அவனைப்போல... எட்டு சாணு... உயரமுள்ள மனுசங்கடா...
என்ற அவரது உணர்ச்சிமிகு பாடல்... ஒடுக்கப்பட்டவர்களின்  உரிமை கீதமாக என்றென்றும் ஒலிக்கும்...

மக்கள் கவிஞர் 
இன்குலாப் 
மறைவிற்கு 
நமது மனங்கசிந்த அஞ்சலி...

Expected IDA increase from 1st January 2017 ..

Thursday, 1 December 2016

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85.உடல் நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சிதம், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் மனைவி திருமதி.ரஞ்சிதம் அம்மையார் (வயது 82) இன்று (01.12.2016) காலை 10.30 மணி அளவில் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீவைகுண்டம் அன்னாசாமி தேவர் சந்தோசியம்மாள் தம்பதிகளின் மகளான ரஞ்சிதம் அம்மையாருடன் பிறந்த சகோதரர் 3 பேரும், சகோதரிகள் 6 பேரும் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை தேவர் சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதாலும், அடிதட்டு மக்களுக்கு ஆதரவாக நின்றதாலும் சில சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர். சமூக நல்லிணக்கத்திலும், மனிதாபிமானமாக செயல்படுதிலும் ஆர்வமுள்ள குடும்பத்தை சார்ந்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியரான தோழர் நல்லகண்ணு ரஞ்சிதம் அம்மையாரின் திருமணம் காலச்சென்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவரான தோழர் ப.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இவர்களுக்கு காசிபாரதி, ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர். காசிபாரதி ஆசிரியராகவும், ஆண்டாள் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆசிரியர் பணியில் சேர்ந்த ரஞ்சிதம் அம்மையார் படிப்படியாக உயர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள மணல்விளை ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
தோழர் நல்லகண்ணு வின் பொதுவாழ்கை வெற்றிகரமாக அமையவும், மக்களின் நன்மதிப்பை பெறவும் இவரது ஆதரவும், ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.
கணவரின் பொதுவாழ்க்கையையும்;, குழந்தைகளின் எதிர்காலத்தையும் சிறப்பாக பராமரித்து வந்த ரஞ்சிதம் அம்மையார் கல்வி பணியில் தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி வந்தார்.
அன்னாரின் உடலுக்கு நாளை (02.12.2016) மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் இறுதி காரியங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், அனைத்து தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
clip

Tuesday, 29 November 2016

பார் போற்றும் பொதுவுடைமை சிற்பியே


Sunday, 27 November 2016

புரட்சிப் பந்தைப்
புவிக் கோளத்தில்
சுழற்றி விட்டவன்
லெனின் கனவுகளை
நிலப் பரப்பில்
நிஜமாக்கி வாழ்ந்தவன்
அமெரிக்காவின் காலடிகளில்
அமிலக் கரைசலை
அடர்த்தி யாக்கியவன்
புவிப் புரட்சியாளர்களின்
ரத்த நாளங்களில்
வீரியத்தை விதைத்தவன்
சுற்றியிருக்கும் நாடுகளுக்கு
சுகத்தை ஏற்றுமதி செய்த
அகத் தூய்மையாளன்
வாடிக்கனே வலியவந்து
வாழ்த்திய விடியல் இவன்
தோல்விக்கு தோல்வி தந்து
தோள்களைத் தோழமைக்கு ஈந்து
மறைந்தானோ இவனல்லன்
மார்க்சிய மெய்ப்பொருள் ஆனான்.
கொல்லச் சூழ்ச்சிகள் செய்த
குள்ளநரி ஏகாதிபத்தியம்
வெல்ல முடியவில்லை
மெல்ல இயற்கை அணைத்தாள்
வாழ்க நின்புகழ் காஸ்ட்ரோ
வான் வாழும் மட்டில்.

Courtesy:G.JAYARAMAN SECY NFTE, FACE BOOK PAGE 


Saturday, 26 November 2016

க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது. இத்தனைக்கும் பஞ்சத்தில் அடிபட்ட வம்சத்தில் இருந்து வந்தவரல்லர் அவர். மாபெரும் பண்ணையார் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தவர். ஆனால் தேச விடுதலைக்காக, ஏகாதிபத்திய ஒழிப்புக்காகச் சொத்து சுகங்களைத் தூக்கிப் போட்டுவிட்டுத் துப்பாக்கி ஏந்தி, காட்டுக்குள் போனவர் அவர். சோவியத் யூனியனே சிதறிப் போன பிறகும், இன்று வரை க்யூபா ஒரு கம்யூனிச தேசமாக உய்ரித்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ.அவரது மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி!!

Friday, 25 November 2016

குரோம்பேட்டை கோட்ட மாநாடு

இன்று நடைபெற்ற குரோம்பேட்டை மாநாட்டின் நிர்வாகிகள் தேர்தலை நமது மாநில செயலர் சி.கே.மதிவாணன் நடத்திவைத்து சிறப்புரை ஆற்றினார். தோழர் சத்யாவை கோட்ட செயலராக கொண்ட புதிய நிரவாகிகள் ஒருமனதாக தேர்ந்தேடுக்கப்பட்டார்கள்.

செல் டவர் கம்பெனி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இன்று நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், அவர்கள் மீதான வன்முறைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, போர்கள், கலவரங்கள், மோதல்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மற்றும் பிற வடிவங்களினால் வன்முறைக் கொடுமைகளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் ஆளாகி வருகின்றனர். உலகில் மூன்றில் ஒரு பெண், அவளின் வாழ்நாளில் ஒருமுறையேனும் கொடுமையான வன்முறைக்கு ஆளாகிறாள். இவற்றைத் தடுத்து நிறுத்த உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய நாள் இன்று.
நாடு முழுவதுமுள்ள 65000 செல்கோபுரங்களை தனியாகப்பிரித்து20000கோடிமதிப்பீட்டில்.
துணை நிறுவனம் அமைக்க முயற்சி செய்யும்

மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து    
BSNL  அனைத்து சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய மத்திய  இடைவேளைஆர்ப்பாட்டம்.


நாள்25-11-16
இடம்:அண்ணா சாலை தொலைபேசி வளாகம்
நேரம் மத்தியம் 1மணிக்கு

இன்றைய நிலைமையில் இந்தியா எங்கும் சுமார் 60000 செல் கோபுரங்கள் உள்ளன. BSNL டவர்களை மற்ற நிறுவனங்களுடன் வருமானத்தை பெருக்கி கொள்வதற்காக பகிர்ந்து கொள்வதைஎதிர்க்கவில்லை.ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் துணை டவர் கம்பெனி ஆக மாற்ற காரணம் என்ன?  இதன் மூலம் டவர் மீதுள்ள நமது பிடிமானம் போய்விடும். இது ஏற்கனேவே செலவு அதிகரித்துள்ள நமது நிறுவனத்தின் பொருளாதாரம் மேலும் சீர்கெடும் நிலைமைக்கு தள்ளி விடும். நமது அகண்டவரிசை சேவை ஏற்கெனவே பிரிக்கப்பட்டு BBNL ஆக மாற்றப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தரைவழி சேவை மட்டுமே நம்மிடம் இருக்கின்ற நிலைமைக்கு போய்விடும்.

இது நமது BSNL நிறுவனத்தைபடுகுழியில் தள்ளும் மத்திய அரசு
BSNL என்னும்
பெருநிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கமுயலும்...
தனி துணை  நிறுவன   முயற்சியைத் தடுப்போம்...


ஒன்றாய் அணி திரள்வீர் தோழர்களே

Thursday, 24 November 2016

63 rd NFPTE anniversary

63வது சம்மேளன தினம்   சென்னையில் நடந்த பிருமாண்டமான விழா

இன்று குரோம்பேட் தொலைபேசி வளாகத்தில் நடைபெற்ற நமது NFPTE சம்மேளத்தின்  63 வது வருட விழா நடைபெற்றது. AITUC  மாநில தலைவர் தோழர்.கே.சுப்பராயன் மற்றும் தோழர்கள் சி.கே.மதிவாணன், அசோக்ராஜ்,ராஜசேகரன்,எம்.கே.ராமசாமி, இளங்கோவன் மற்றும் ரவி ஆகியோர்  கலந்து கொண்டு உரை ஆற்றினர்.

தோழர் கே.சுப்பராயன் "பொது துறை நிறுவனங்களை காப்பதில் தொழிற்சங்கங்களின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றினார்.